ADDED : ஜூலை 17, 2025 12:26 AM

திண்டிவனம் : திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது.
ஒலக்கூர் வட்டாரத்தில் உள்ள, 25 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் போட்டி நேற்று காலை நடந்தது. வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை, ஒலக்கூர் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பள்ளியின் தாளாளர் செல்லதுரை, தலைமையாசிரியர் ஜெபா(பொறுப்பு), உதவி தலைமையாசிரியர்கள் மோகன், ஜோசப்பிரேம்குமார் முன்னிலை வகித்தனர்.
உடற்கல்வி இயக்குனர் ஜான், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரான்சிஸ் சாமுவேல், பிரேம்சந்தர், டேவிட்செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையில், 11, 14 மற்றும் 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் செஸ் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, விழா நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று வட்டார கல்வி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.