UPDATED : நவ 01, 2026 06:53 PM
ADDED : நவ 01, 2026 06:48 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான 6வது கராத்தே போட்டி நடந்தது.
விழுப்புரம் ஆஞ்சநேயா மண்டபத்தில் நடந்த போட்டிக்கு, ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேசன் மாவட்ட தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். போட்டியை, முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சங்க பொதுச் செயலாளர் முருகன் வரவேற்றார்.
போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கட்டா, குமித்தே ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
போட்டியில் பங்கேற்றோரில் சிறந்தவர்களை, டெக்னிக்கல் இயக்குநர் கோபாலகிருஷ்ணன், ரெப்ரி கமிஷன் தலைவர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் 40 நடுவர்கள் பங்கேற்று தேர்வு செய்தனர்.
நிர்வாகிகள் செல்வகுமார், சூரியபிரகாஷ், சுவாதி, குருநாதன், ஆறுமுகம் உட்பட கராத்தே பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாக அலுவலர் எமர்சன் ராபின், சிவசக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் துரைசாமி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
போட்டியில் வென்ற அனைத்து மாணவர்களும் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட பொருளாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.
