/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேரிடர் கால பல்நோக்கு மையங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
பேரிடர் கால பல்நோக்கு மையங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பேரிடர் கால பல்நோக்கு மையங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பேரிடர் கால பல்நோக்கு மையங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : நவ 28, 2024 07:19 AM
விழுப்புரம்: மரக்காணம் அருகே மீனவ கிராம மக்களை தங்க வைப்பதற்கான பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் ஏற்படுத்தியுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம், கலெக்டர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வடகிழக்கு பருவ கனமழை முன்னெச்சரிக்கையை யொட்டி, மரக்காணம் அருகே கூனிமேடுகுப்பம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மீனவ கிராம மக்களை தங்க வைப்பதற்காக பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம், கலெக்டர் பழனி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த மையங்களில், சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பறை, மின்வசதி, ஜெனரேட்டர் வசதி செய்துள்ளதை ஆய்வு செய்தனர். பொதுமக்களை தங்க வைத்தால் அவர்களுக்கு தேவையான உணவு, பாய், போர்வை, குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் தயார் நிலையில் உள்ளதை, ஆய்வு செய்தனர். சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், மரக்காணம் தாசில்தார் பழனி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.