/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட வள பயிற்றுநர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
/
மாவட்ட வள பயிற்றுநர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : அக் 11, 2024 11:14 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பணிபுரிய, ஒரு மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். சமூகவியல், சமூகப்பணி போன்றவற்றில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்று, வறுமை குறைப்பு திட்டம் தொடர்பான சமூக மேம்பாட்டு நிறுவனத்தில் (சுய உதவிக்குழு) குறைந்தப்பட்சம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க, ஆவணப்படுத்துதல் தெரிந்திருக்க வேண்டும். நிதி சார்ந்த திட்டம் தயாரித்தல் மற்றும் நிர்வாக திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றிய விரிவான புரிதல் பெற்றிருக்க வேண்டும். திட்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பயணம் செய்ய விருப்பமுடையவராக இருத்தல் வேண்டும். கணினி அடிப்படை திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை கட்டடம், பெருந்திட்ட வளாகம், விழுப்புரம். என்ற முகவரிக்கு, 14ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ காலை 10:00 மணி முதல் 5:00 வரை அனுப்பலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.