/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட விளையாட்டு போட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாவட்ட விளையாட்டு போட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : அக் 29, 2025 11:30 PM

திண்டிவனம்: மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில், சாணக்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
திருவண்ணாமலையில், கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலாலான போட்டிகளில், திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
அப்பள்ளி மாணவர் பிரித்விராஜ் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பிடித்தார். மாணவர் லிங்கேஷ் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்திலும், லோகேஸ்வரன், 400 மீட்டர் ஓட்ட பந்தயத்திலும் முதலிடம் பிடித்தனர்.
இதேபோல், மாணவர் பிளேஸ்டோபால்ராஜ் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடமும், மாணவர் லிங்கேஷ் 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடமும், ஹரி கிரிஷ்ணா 100 மீட்டர் தடை தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்று, சாதனை படைத்தனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட அளவில் வென்ற மாணவர்களை கல்வி குழும தலைவர் தேவராஜ், துணை தலைவர் வேல்முருகன் ஆகியோர் பாராட்டினர். பள்ளி முதல்வர் அருள்மொழி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

