/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அர்ச்சனா ரெசிடென்சியில் தீபாவளி பண்டிகை ஸ்வீட்ஸ் கண்காட்சி
/
விழுப்புரம் அர்ச்சனா ரெசிடென்சியில் தீபாவளி பண்டிகை ஸ்வீட்ஸ் கண்காட்சி
விழுப்புரம் அர்ச்சனா ரெசிடென்சியில் தீபாவளி பண்டிகை ஸ்வீட்ஸ் கண்காட்சி
விழுப்புரம் அர்ச்சனா ரெசிடென்சியில் தீபாவளி பண்டிகை ஸ்வீட்ஸ் கண்காட்சி
ADDED : அக் 16, 2025 11:27 PM

விழுப்புரம்: விழுப்புரம் அர்ச்சனா ரெசிடென்சியில், தீபாவளி ஸ்வீட்ஸ் சிறப்பு கண்காட்சி துவக்க விழா நடந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள அர்ச்சனா ரெசிடென்சியில், 35வது ஆண்டு தீபாவளி ஸ்வீட்ஸ் சிறப்பு கண்காட்சி நேற்று துவங்கியது. ஓட்டல் அர்ச்சனா குரூப்ஸ் உரிமையாளர் சுப்புராமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் விழுப்புரம் ராமகிருஷ்ணா லாட்ஜ் உரிமையாளர் ஜெயச்சந்திரன் ஸ்வீட்ஸ் கண்காட்சியை விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரி புகை பரிசோதனை நிலைய உரிமையாளர் ஆனந்தன், ஆஷிக் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் ஜாபர்சேட், அர்ச்சனா ரெசிடென்சி மேலாளர்கள் ராமச்சந்திரன், சங்கர் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
அர்ச்சனா குரூப்ஸ் உரிமையாளர் சுப்புராமன் கூறுகையில், 'அர்ச்சனா இனிப்பகத்தில், தொடர்ந்து 35வது ஆண்டாக தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ஸ்வீட்ஸ் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியுள்ளது. இக்கண்காட்சி வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு ஏராளமான ஸ்வீட்ஸ் வகைகள் விற்பனைக்கு உள்ளன.
மேலும் ஸ்பெஷல் இனிப்புகளாக காஜூ கசடா, காஜூ டைமன், காஜூ வாட்டர்மிளான், டிரைப்ரூட்ரோல், காஜூ அஞ்ஜீர்ரோல், அஞ்ஜீர்கிங், காஜூ அத்திசுகர்லஸ், கேரட், பீட்ரூட், பாதாம், பேரிச்சம் கருப்பட்டியிலான மைசூர்பாகு வகைகள், டிரை ப்ரூட்அல்வா, கோஅல்வா, கேசர் சோன்பப்டி, பாதாம் சோன்பப்டி, காஜூ மில்க்பைட்ஸ், குல்கந்துரோல் உள்ளிட்ட 200 வகையான ஸ்வீட்ஸ்களும், 75 கார வகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.