/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி சீட்டு மோசடி: பாதித்தவர்கள் மனு
/
தீபாவளி சீட்டு மோசடி: பாதித்தவர்கள் மனு
ADDED : அக் 01, 2024 07:21 AM
விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி 200 பேரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பள்ளித்தென்னல் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் அளித் துள்ள மனு:
பள்ளித்தென்னல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளான பிரகாஷ், அவரது மனைவி வித்யா ஆகியோர் ஏலச் சீட்டு நடத்தி வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி சீட்டு நடத்திய இவர்களிடம் கிராமத்தைச் சேர்ந்த பலர் 10 ஆயிரம், 30 ஆயிரம் என தீபாவளி பண்டு என பிடித்து பணம் வசூலித்தனர். 198 பேர் பணம் கட்டி முடித்துள்ளோம்.
கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது, அவர்கள் கூறியபடி தீபாவளிக்கான பட்டாசு, நகை, பொருள்கள் தருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். இதுவரை கட்டிய பணத்தை கூட தராமல் காலம் தாழ்த்துகின்றனர். பணம் கேட்டால் ரவுடிகளைத் தெரியும், அரசியல்வாதிகளை தெரியும் என கூறி மிரட்டுகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.