/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 21, 2024 12:20 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் தே.மு.தி.க.,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகர செயலாளர் காதர்பாஷா தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வார்டு வாரியாக நியமிக்கப்பட்ட பூத் நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட செயலாளரிடம் வழங்கப்பட்டது. சென்னையில் வரும் டிச.28 ம் தேதி நடைபெறும் விஜய்காந்த் முதலாவது நினைவு நாள் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் தயாநிதி, மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் கனகராஜ், புண்ணியக்கோடி, செல்வம்,தணிகைவேல், வீரராஜபாண்டியன், ஷியாமளா, கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.