/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., - அ.தி.மு.க., பிரமுகர்கள் அழுத்தம் காரணம் பிசுபிசுத்துப் போனது மீனவ பெண்கள் போராட்டம்
/
தி.மு.க., - அ.தி.மு.க., பிரமுகர்கள் அழுத்தம் காரணம் பிசுபிசுத்துப் போனது மீனவ பெண்கள் போராட்டம்
தி.மு.க., - அ.தி.மு.க., பிரமுகர்கள் அழுத்தம் காரணம் பிசுபிசுத்துப் போனது மீனவ பெண்கள் போராட்டம்
தி.மு.க., - அ.தி.மு.க., பிரமுகர்கள் அழுத்தம் காரணம் பிசுபிசுத்துப் போனது மீனவ பெண்கள் போராட்டம்
ADDED : பிப் 13, 2024 05:23 AM
கோட்டக்குப்பத்தில் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மீனவ பெண்களுக்கு ஆளும் கட்சியினர் அழுத்தம் கொடுத்துள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடுக்குப்பம், தந்திராயன்குப்பம், அனிச்சங்குப்பம் உள்பட 6 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்துக்கொண்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள மீனவ பெண்கள் மீன்களை எடுத்துக் கொண்டு கோட்டக்குப்பம் காவல் நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த மீன் மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் அந்த மீன் மார்க்கெட்டை அகற்றிவிட்டு நகராட்சி அலுவலகம் கட்ட கடந்தாண்டு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சில தினங்களுக்கு முன் நகராட்சி அதிகாரிகள் மீன் மார்கெட்டில் திடீரென பூமி பூஜை போட வந்தனர். அப்போது மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்திருந்த 50க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பணி நிறுத்தப்பட்டது.
மீனவ பெண்கள் போராட்டத்திற்கு பின்னால் இருந்து ஆதரவு கொடுத்த தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிலரை, ஆளும் கட்சி பிரமுகர் சரிகட்டி அவர்களை ஒதுங்கிக் கொள்ளுமாறு கூறியதின் பேரில் அவர்களும் மீனவ பெண்களுக்கு ஆதரவு கொடுக்காமல் ஓரம் கட்டிக்கொண்டனர்.
இதனால் மீனவ பெண்கள் மட்டும் தனித்து நின்று போராட முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதில் சில மீனவ பெண்களின் கணவர்களும், ஆளும் கட்சியினரின் அழுத்தத்தின் பேரில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு நகராட்சி நிர்வாகம் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியினர் கவனிப்பாலும், அழுத்தத்தாலும் போராட்டம் பிசுபிசுத்துப்போனதாக மீனவ பெண்கள் புகார் தெரிவத்து வருகின்றனர்.