/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2024 05:18 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் மாவட்ட அ.ம.மு.க., சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் பால்ராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக இளைஞர்களின் அரசுப்பணி கனவை சிதைத்து, போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி, வேடிக்கை பார்த்து, அவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் தி.மு.க., அரசை கண்டித்து பேசினர்.
மாவட்ட துணை செயலாளர் பழனிவேல், மாவட்ட மகளிரணி சாந்தி, வழக்கறிஞர் பிரிவு செல்வி, நகர செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம்: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் முத்து தலைமை தாங்கினார். தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் முத்துக்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் விஸ்வநாதன், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட செயலாளர்கள் குமரன், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் கணபதி கண்டன உரையாற்றனார். நகர செயலாளர் (கிழக்கு) அபிஅன்சாரி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

