/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., முகவர்கள் கூட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு
/
தி.மு.க., முகவர்கள் கூட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு
தி.மு.க., முகவர்கள் கூட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு
தி.மு.க., முகவர்கள் கூட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : செப் 28, 2025 03:43 AM

செஞ்சி: திண்டிவனம், மயிலம் தொகுதி தி.மு.க., ஒட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டிவனம், மயிலம் தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள், தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமையில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
ஒன்றிணைந்த மரக்காணம் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு இன்று காலை 11:00 மணிக்கு மரக்காணம் ஒன்றியம் சிறுவாடி முருக்கேரியில் உள்ள ஏ.எம்.எஸ்., திருமண மண்டபத்திலும், மாலை 5:00 மணிக்கு திண்டிவனம் நகரம், ஒலக்கூர் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு, திண்டிவனம் மணக்குள விநாயகர் திருமண மண்டபத்திலும், நாளை 29ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் மற்றும் ஒருங்கிணைந்த மயிலம் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு தீவனுார் ஜி.ஜே., திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் ஓட்டுச்சாவடி முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.