/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனைக் கூட்டம்
/
தி.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனைக் கூட்டம்
ADDED : நவ 10, 2025 11:11 PM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., காணை மத்திய ஒன்றிய பூத் ஏஜன்ட், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வாழப்பட்டு, அகரம் சித்தாமூர் கிராமங்களில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, வரும் சட்டசபை தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்றி, தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் ராஜா, முருகன், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர் சிவராமன், பொருளாளர் ஏரப்பன், கிளை செயலாளர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

