/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 02, 2025 10:19 PM

அவலுார்பேட்டை:  மேல்மலையனுாரில் ஒன்றிய  தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள், ஏஜன்ட்டுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய அவைத்தலைவர்கள் ஏழுமலை, ஆறுமுகம், உதயகுமார் தலைமை தாங்கினர். செஞ்சி சட்ட சபை தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் கவனம் செலுத்தி முதல்வரின் சாதனைகளை வீடு தோறும் சென்று எடுத்துக் கூறி ஓட்டுகளை அதிகளவில் சேகரிக்க வேண்டும்.
இந்திய பொருளாதாரத்தில் ஒன்றிய அரசு பின்தங்கியுள்ளது. தமிழ்நாடு முந்தி வருகிறது, முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத்திறமையினால் வரலாறு படைத்து வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகளை தி.மு.க., தோற்கடித்துள்ளது. 234 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் என மக்கள் தீர்மானித்துள்ளனர்.
பீகார் மக்கள் தமிழகத்தில் அவமதிக்கப்படுகிறார்கள் என பீகார் தேர்தல் பிரசாரத்தில் தவறாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்யும் தமிழகத்தில்தான் பீகார் உள்ளிட்ட பிற மாநில  மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்' என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் சாந்தி, நாராயணமூர்த்தி, ஒன்றிய , கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

