/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்திய கம்யூ., வழக்கறிஞர்கள் ஆலோசனை
/
இந்திய கம்யூ., வழக்கறிஞர்கள் ஆலோசனை
ADDED : நவ 02, 2025 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இந்திய கம்யூ., கட்சியின் சென்னை ஐகோர்ட் அதிகார வரம்பிற்குட்பட்ட 25 மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாரதி தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.
தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
விழுப்புரம், சென்னை, அரியலுார், கடலுார் உள்ளிட்ட 25 மாவட்ட இந்திய கம்யூ., கட்சியின் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

