ADDED : டிச 22, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: வல்லம் ஒன்றியம், கீழ்பாப்பம்பாடி கிராமத்தில் தி.மு.க., சார்பில் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பிரசாரக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் துரை தலைமை தாங்கினார். ஒன்றிய தேர்தல் பார்வையாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் நாகமுத்து சேகர் வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஒன்றிய தேர்தல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், அவைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயா கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் குமரேசன், நிர்வாகிகள் பார்த்திபன், சரவணன், நிர்மல்குமார் பங்கேற்றனர்.

