/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., தொகுதி பார்வையாளர் ஆய்வு கூட்டம்
/
தி.மு.க., தொகுதி பார்வையாளர் ஆய்வு கூட்டம்
ADDED : நவ 08, 2024 11:10 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் தி.மு.க., தொகுதி பார்வையாளர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்திற்கு, தொகுதி பொறுப்பாளர் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.
தொகுதி பார்வையாளர் ஜெயராஜ், முண்டியம்பாக்கம், ஒரத்துார், தும்பூர், உலகலாம்பூண்டி, கொட்டியாம்பூண்டி ,வி.சாத்தனுார், பொன்னங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டி சரி பார்த்தல், கட்சி வளர்ச்சி பணி 2026 தேர்தல் பணி குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய தலைவர் முரளி, பொருளாளர் முரளி, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், கண்காணிப்பு குழு எத்திராசன், கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், செல்வம், சாவித்திரி பாலு, ரவிச்சந்திரன் உட்படப லர் பங்கேற்றனர்.