ADDED : அக் 18, 2024 07:18 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., ஓட்டுச்சாவடி, முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். தி.மு.க., மாநில துணை பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், தலைமை கழக தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், கார்த்திகேயன், கருணாநிதி, ஜெயராஜ் ஆகியோர் ஆலோசனை வழங்கிப் பேசினர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், இளந்திரையன், கற்பகம், மாநில மகளிரணி பிரசாரக்குழு தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, பிரபாகரன், முருகவேல், நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கம், கிளையை வலுப்படுத்துவது என்பது உட்பட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.