ADDED : அக் 23, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் தி.மு.க., கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆலோசனை வழங்கி பேசினார்.
இளைஞர்கள், மகளிர்களை அதிகளவு உறுப்பினர்களாக சேர்ப்பது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் நாராயணமூர்த்தி, சாந்தி, மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.