ADDED : டிச 31, 2025 04:26 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், மேற்கு நகர பகுதியில் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பரப்புரை நிகழ்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மேற்கு நகரம் 24வது வார்டு பூத் எண் 133, 134, 135ல் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, நிர்வாகிகளுக்கு ஆலோசனையும், பொதுமக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
நகர பொறுப்பாளர் சக்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், கவுன்சிலர் புல்லட் மணி, பொறுப்புக்குழு உறுப்பினர் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் வைத்தியநாதன்.
வார்டு செயலாளர் ரமேஷ், பிரதிநிதிகள் செல்வராஜ், செந்தில், முன்னாள் வார்டு செயலாளர் கென்னடி, மாவட்ட நலவாரிய அமைப்பாளர் சரவணகுமார், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராம், நகர ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பிரகதீஸ்வரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்த்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சூர்யா, நகர மாணவரணி அமைப்பாளர் சுகன், தொண்டரணி துணை அமைப்பாளர் சூர்யா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

