/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பவள விழா அமைச்சர் பங்கேற்பு
/
தி.மு.க., பவள விழா அமைச்சர் பங்கேற்பு
ADDED : செப் 23, 2024 05:50 AM

திருவெண்ணெய்நல்லுா : தி.மு.க., பவள விழாவையொட்டி கட்சி சார்பில் கொடியேற்று விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் மேற்கு ஒன்றியம் வளையாம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதிமங்கலம், ஏமப்பூர் ஊராட்சிகளில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் பொன்முடி கொடியேற்றி சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, பிரதிநிதிகள் பக்தவச்சலம், சடகோபன். ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை, முன்னாள் அவைத்தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.