sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு விளக்க கடிதம்; வல்லம் ஒன்றிய கூட்டத்தில் பரபரப்பு

/

 தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு விளக்க கடிதம்; வல்லம் ஒன்றிய கூட்டத்தில் பரபரப்பு

 தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு விளக்க கடிதம்; வல்லம் ஒன்றிய கூட்டத்தில் பரபரப்பு

 தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு விளக்க கடிதம்; வல்லம் ஒன்றிய கூட்டத்தில் பரபரப்பு


ADDED : ஜன 06, 2026 03:29 AM

Google News

ADDED : ஜன 06, 2026 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: வல்லம் ஒன்றிய குழு கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததும், அதற்காக அவர் கொடுத்த விளக்க கடிதமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வல்லம் ஒன்றிய கூட்டம் சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சிலம்பு செல்வன் முன்னிலை வகித்தார். அனைத்து கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கி தீர்மானங்களை வாசிக்க துவங்கியதும் மொடையூர் தி.மு.க., கவுன்சிலர் பக்தவச்சலம் தனது பகுதியின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்ற வில்லை என கூறி வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் செலவினங்களுக்கு ஒப்புதல் வழங்கியும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வெளிநடப்பு செய்த கவுன்சிலர் பக்தவச்சலம் வடக்கு மாவட்ட தி.மு.க., வில் தொழிலாளர் அணி மாவட்ட தலைவராக உள்ளார். உள்ளாட்சி தேர்தலின் போது இவருக்கு தி.மு.க., சார்பில் சீட் வழங்காததால் சுயேச்சையாக வெற்றி பெற்று கவுன்சிலரானார்.

இவர் வெளிநடப்பு செய்ததுடன், இதற்கான காரணங்களை விளக்கி பி.டி.ஓ., சிலம்பரசனிடம் கடிதம் கொடுத்தார்.

அந்த கடிதத்தில் தனது கவுன்சில் பகுதியில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் திறந்த வெளி கிணறு, குளத்துமேடு பகுதியில் தார் சாலை, அங்காளம்மன் கோவில் தெருவில் ஏரி நீர் வரும் இடத்தில் சிறுபாலம் உள்ளிட்டவைகள் கடந்த 4 ஆண்டாக கேட்டும் செய்து தரவில்லை, தீர்மான புத்தகத்தில் எந்த தீர்மானமும் பதிவிடாமல் கவுன்சிலர்களிடம் கையொப்பம் வாங்குவதையும் கண்டித்தும் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்துள்ளார்.

வல்லத்தில் தி.மு.க.,வை சேர்ந்தவர் ஒன்றிய சேர்மேனாக உள்ள நிலையில், தி.மு.க. மாவட்ட பொறுப்பில் உள்ள கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததும், அதற்காக குறிப்பிட்டுள்ள காரணங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us