/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாளை தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்
/
நாளை தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : மே 20, 2025 11:46 PM

விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நாளை கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை:
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நாளை 22ம் தேதி கலைஞர் அறிவாலயத்தில் மாலை 3:00 மணிக்கு எனது தலைமையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில், மண்டல தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்முடி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் தேன்மொழி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம்.தலைமை தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைத்து அணி நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.