/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 11, 2024 05:44 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றிய கிழக்கு தி.மு.க., சார்பில் அன்னமங்கலம் கிராமத்தில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இளைஞரணி நிர்வாகி நிர்மல்குமார் வரவேற்றார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர், செஞ்சி தொகுதி பார்வையாளர் அப்துல் மாலிக் முகவர்களிடம் கருத்துகளைக் கேட்டு, புதிய வாக்காளர்களை சேர்க்கவும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
ராதாபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார் .தொகுதி பொறுப்பாளர் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் ரவிதுரை வரவேற்றார். தொகுதி பார்வையாளர் ஜெயராஜ், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டி சரிபார்த்தல், கட்சி வளர்ச்சி பணி, 2026 தேர்தல் பணி குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
செஞ்சி
வல்லம், நாட்டார்மங்கலம், பள்ளிகுளம், மேல் அத்திப்பாக்கம், மேல்சித்தாமூர் உள்ளிட்ட 15 கிகைளை சேர்ந்த ஓட்டுச்சாவடி பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாட்டார்மங்கலத்தில் நடந்தது. மத்திய ஒன்றிய செயலாளர் இளம்வழுதி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். அமைப்பு சார தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் வரவேற்றார். மயிலம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி தேர்தல் ஆலோசனைகளை வழங்கி பேசினார். ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் பங்கேற்றனர்.
வானுார்
வானுார், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, இரும்பை, கழுப்பெரும்பாக்கம் பகுதிகளில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முரளி, சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கினர். தொகுதி மேற்பார்வையாளர் கருணாநிதி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பணிகள், வாக்காாளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜவேலு, பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.