/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம்
/
தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 03, 2026 05:03 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திராவிட பொங்கல், சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், மாரிமுத்து, பிரேமா குப்புசாமி முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் சுரேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சம்பத், இளங்கோவன், நகர செயலாளர்கள் வெற்றிவேல், ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், ராஜா, சந்திரசேகர், முரளி, மைதிலி ராஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

