/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., ஆட்சி கோமா நிலையில் உள்ளது 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு
/
தி.மு.க., ஆட்சி கோமா நிலையில் உள்ளது 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு
தி.மு.க., ஆட்சி கோமா நிலையில் உள்ளது 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு
தி.மு.க., ஆட்சி கோமா நிலையில் உள்ளது 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு
ADDED : பிப் 17, 2024 05:33 AM
திண்டிவனம், : 'தி.மு.க.,வின் 33 மாத ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
திண்டிவனம் நகராட்சியில் நகரமன்ற கூட்டத்தைக் கூட்டுவதற்கே நகர மன்ற தலைவர் தன்னுடைய சொந்த கட்சி கவுன்சிலர்களின் காலில் விழ வேண்டியுள்ளது. இங்கு தி.மு.க.,வில் பல கோஷ்டிகள் உள்ளன. இவர்களுக்கெல்லாம் பாஸ் செஞ்சியில் உள்ள அமைச்சர்தான்.
தி.மு.க., தலைமை எப்படி இருக்கிறதோ அப்படிதான் திண்டிவனம் நகராட்சியும் உள்ளது. ஸ்டாலின் வராரு, விடியல் தரப்போகிறார் என்றனர். தற்போது தி.மு.க.வின் குடும்பத்திற்கும், தி.மு.க., வினருக்கும்தான் விடிஞ்சது. மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. தி.மு.க.,வின் 33 மாத ஆட்சியில் எந்த வித முன்னேற்றமும் இல்லை.
திண்டிவனம் நகராட்சியில் அனைத்து சாலைகளிளும் புழுதி பறக்கிறது. சகாரா பாலைவனத்தில் செல்வது போல் இருக்கிறது. பாதாள சாக்கடை பணிகள் நடந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.
திண்டிவனம் நகராட்சியின் சீர்கேடு குறித்து தி.மு.க., கவுன்சிலர்களே குறை கூறுகின்றனர். தி.மு.க., ஆட்சி நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து, கோமா நிலையில் உள்ளது.
இவ்வாறு சண்முகம் பேசினார்.