/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்
ADDED : ஜூன் 28, 2025 03:09 AM

விழுப்புரம் : கோலியனுாரில் தி.மு.க., இளைஞரணி, கிழக்கு ஒன்றியம் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
கூட்ரோடில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரேம், ராஜவேல், கலைவாணன், தேவேந்திரன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய அவை தலைவர் கண்ணப்பன், பொருளாளர் சவுந்தராஜன், மாவட்ட பிரதிநிதிகள் சிவசங்கர், குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் தொகுதி பார்வையாளர் துரை சரவணன் பேசினார்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் வகாப் அதாயி ஆகியோர் தமிழக அரசின் சாதனை விளக்கி பேசினர்.
தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, ஒன்றிய சுற்றுசூழல் அணி சிவராமன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய துணை தலைவர் உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, பச்சையம்மாள், வசந்தா, ஊராட்சி தலைவர் கோமதி மணி கட்சியினர் பங்கேற்றனர்.
மாவட்ட பிரதிநிதி மணி நன்றி கூறினார்.