/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காயமடைந்த மாணவருக்கு தி.மு.க., பொறுப்பாளர் சிகிச்சை
/
காயமடைந்த மாணவருக்கு தி.மு.க., பொறுப்பாளர் சிகிச்சை
காயமடைந்த மாணவருக்கு தி.மு.க., பொறுப்பாளர் சிகிச்சை
காயமடைந்த மாணவருக்கு தி.மு.க., பொறுப்பாளர் சிகிச்சை
ADDED : அக் 28, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே விபத்தில் காயமடைந்த மாணவருக்கு, தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் கிராம சாலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு வாகன விபத்து ஒன்றில் கல்லுாரி மாணவர் காயமடைந்தார். அப்போது, அவ்வழியே காரில் சென்ற தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர், டாக்டர் கவுதம சிகாமணி, கீழே இறங்கி மயக்கத்தில் இருந்த மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
மேலும், மாணவரை ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.