/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
ADDED : ஆக 06, 2025 12:39 AM

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., வானுார் தொகுதி, வானுார் கிழக்கு ஒன்றியத்தில், திருச்சிற்றம்பலம், பூத்துறை, பெரம்பை ஆகிய பகுதிகளில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை களப்பணி முகாம் நடந்தது.
தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, வீடு, வீடாக சென்று, உறுப்பினர் சேர்க்கை பதிவினை பார்வையிட்டு, பணிகளை துரிதமாக மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், வானுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முரளி, ஒன்றிய சேர்மன் உஷா முரளி, முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, முன்னாள் சேர்மன் சிவா, கிளைச்செயலாளர்கள் ராமதாஸ், அருண், வெங்கடசாமி, அன்பழகன், விஜயரங்கன், கார்த்திகேயன், சங்கர். கோபால், வினோத், முருகன், ரத்தினவேல், பிரபாகரன், பெருமாள், ஒன்றிய நிர்வாகிகள் ஹென்றிதாஸ், மண்ணாங்கட்டி, கோபாலகிருஷ்ணன், பிரதீப், சங்கர், தொண்டரணி குலோத்துங்கன், சம்பத், பிரதிநிதிகள் பத்மராஜ், பழனிசாமி, டிஜிட்டல் முகவர்கள் தரணிசீலன், முத்து, குமார், பிரவீன், வேல்முருகன், பார்கவி, குமரேசன், விஜயரங்கன், ஆகாஷ், சதீஷ்குமார், பாலாஜி, அரசகுமார், பாபு, கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

