/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூலை 26, 2025 11:16 PM

விழுப்புரம்: மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம் நகரம் பூந்தோட்டம் பகுதியில், ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை பிரசார களப்பணி நடந்தது.
விழுப்புரம் நகராட்சி 23வது வார்டில் நடந்த களப்பணியை மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், வார்டு செயலாளர் சண்முகம், கவுன்சிலர் மணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சூர்யா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்த்ராஜ், ஓட்டுசாவடி நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கட், விஜி, விஜயகுமார், செந்தில், அருண், பரத், பாலன், சக்தி, சந்திரசேகர், முருகன், தேவதாஸ், வெங்கடேசன், சுந்தர், ராஜதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழுப்புரம் கே.கே.ரோடு, ராஜிவ்காந்தி நகர், மருதுார் பகுதிகளில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை களப்பணியை எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டு, ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார்.
வார்டு செயலாளர் ஷேக், கவுன்சிலர் ரியாஸ்அகமது, அமைப்பு சாரா ஓட்டுநரணி சலீம், தகவல் தொழில்நுட்ப அணி அபுபக்கர், சிறுபான்மையினர் அணி அபுதாஹிர், முகமதுஅசாருதீன், வைத்தி, உதயச்சந்திரன், செல்வராசு, அருணா தேவி, பூவரசன், சஞ்சய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.