/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அமைச்சரின் சர்ச்சை பேச்சு 'சைலன்ட்' மோடில் விழுப்புரம் அ.தி.மு.க.,
/
தி.மு.க., அமைச்சரின் சர்ச்சை பேச்சு 'சைலன்ட்' மோடில் விழுப்புரம் அ.தி.மு.க.,
தி.மு.க., அமைச்சரின் சர்ச்சை பேச்சு 'சைலன்ட்' மோடில் விழுப்புரம் அ.தி.மு.க.,
தி.மு.க., அமைச்சரின் சர்ச்சை பேச்சு 'சைலன்ட்' மோடில் விழுப்புரம் அ.தி.மு.க.,
ADDED : ஏப் 22, 2025 04:47 AM
தி.மு.க., அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சைலன்ட் மோடில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சர் பொன்முடி, சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்த தி.க., கூட்டத்தில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கனிமொழி எம்.பி., கண்டனம் தெரிவித்ததையடுத்து, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டது.
அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாலும், அவரது சர்ச்சை பேச்சால், கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு, முதல்வரும் அதிருப்தியில் உள்ளார். அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களும், வலியுறுத்தல்களும் தொடர்ந்து வருகிறது.
அ.தி.மு.க., சார்பில் சென்னை, கடலுார், மதுரை, ஈரோடு, திருச்சி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருவதுடன், அவரை பதவி நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அமைச்சரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்தில் பா.ஜ., - வி.எச்.பி., ஹிந்து முன்னணி அமைப்பினர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அ.தி.மு.க., தரப்பில் எவ்வித கண்டனமும், எதிர்ப்பும், ஒரு துண்டு பிரசுரம் கூட வெளியிடாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு எதிராக, எப்போதும் முதல் கண்டன குரலை எழுப்பும் விழுப்புரத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் சண்முகம், மாநிலம் முழுதும் அமைச்சரின் கொச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மவுனம் சாதித்து வருகிறார். இது அந்த கட்சியினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமைச்சரின் சர்ச்சை பேச்சு தொடர்பாக இதுவரை வாய் பேசாதது, உள்ளூர் அரசியல் அட்ஜெஸ்மென்ட் தான், காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.