/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
/
தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : மே 10, 2025 12:34 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., காணை ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கினார். செயலாளர்கள் ராஜா, முருகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 'நாடு போற்றும் நான்கு ஆண்டு; தொடரட்டும் இது பல்லாண்டு' என பிரசுரிக்கப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும், 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணைச் சேர்மன் வீரராகவன், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, செல்வம், சக்கரவர்த்தி, நாராயணசாமி, கருணாகரன், மதன், புனிதா அய்யனார், ஏழுமலை, ஏரப்பன், சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா குமரன், ஊராட்சி தலைவர்கள் கமலநாதன், பாண்டியன், சிவசங்கர், இந்திராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.