/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால் 100 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை தி.மு.க., மாநில திட்டக்குழு உறுப்பினர் பேட்டி

ADDED : பிப் 07, 2026 04:48 AM

விழுப்புரம்: 'மத்திய அரசு சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால்தான் 100 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை' என தி.மு.க., மாநில திட்டக்குழு உறுப்பினர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்ட மக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளோம். விழுப்புரம் தொகுதியில் 5 ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், மேலும் தேவைகள் குறித்தும் பல்வேறு கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இணையதளம் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்துகள் பெறப்பட்டன. அதன்படி 28 ஆயிரம் கோரிக்கைகள் வந்துள்ளன. இவையெல்லாம் தொகுத்து, சிறந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கான நிதியை குறைத்த மத்திய அரசு, 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என திட்டத்தை மாற்றி ஏமாற்றியுள்ளது. முழு நிதியை ஒதுக்காமல், மாநில அரசின் மீது நிதிச்சுமையை ஏற்றியுள்ளனர்.
தி.மு.க., கூட்டணி வலுவாகவே உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் சுமூகமாக நடத்தப்பட்டு விரைவில் இறுதி செய்யப்படும்.
வருமானவரியில், கல்வி, மருத்துவத்துக்காக 4 சதவீத செஸ் வரி பிடிக்கின்றனர். ஆனால், அந்த தொகையை மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக மத்திய அரசு பயன்படுத்தவில்லை. 2 சதவீதம் கூட நிதியை ஒதுக்குவதில்லை. ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது.
தி.மு.க., கடந்த 2021 தேர்தலுக்காக 505 தேர்தல் வாக்குறுதியளித்தது. அதில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 91 வாக்குறுதிகள், மத்திய அரசின் நிதி சார்ந்த அனுமதியின்றி நிற்கிறது.
இருப்பினும் சில நாட்களுக்குள் மேலும் 10 வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில் 84 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம்.
ஆனால், கடந்த 2016ல் அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் வெறும் 12 சதவீதம் தான் நிறைவேற்றியுள்ளனர். இவ்வாறு எழிலன் நாகநாதன் கூறினார்.
விழுப்புரம் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் உடனிருந்தனர்.