ADDED : மார் 14, 2024 06:11 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம், : மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில், இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற திண்ணை பிரசாரம் சிங்கனுார் புதுகாலனியில் நடந்தது.
தி.மு.க., அரசின் சாதனைகள் மற்றும் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து, மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் பழனி தலைமையில், கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தனர்.
மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் திருமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் கன்னியம்மாள், நாகஜோதி, வழக்கறிஞர் கன்னியப்பன், மாவட்ட பிரதிநிதி தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
