/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கும் விழா
/
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ADDED : ஏப் 29, 2025 04:36 AM

மயிலம்: மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் கொல்லியங்குணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மயிலம் அடுத்த கொல்லியங்குணத்தில் நடந்த கூட்டத்திற்கு, மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநிலத் தீர்மானகுழு உறுப்பினர் செஞ்சி சிவா முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் ஸ்ரீதரன், கிளை செயலாளர்கள் சதீஷ், திவ்யா , வரவேற்றனர்.
முத்துவேல் துவக்க உரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர் நாகம்மை கருப்பையா பேசினார். மஸ்தான் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் மத்திய ஒன்றிய அவைத் தலைவர் பரசுராமன், பொருளாளர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன் துரை, வீடூர் பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர்கள் சங்கர், தமிழரசன், சின்னதுரை மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்சாரி, இலக்கிய அணி செந்தில்குமார், விவசாய அணி தலைவர் சுப்ரமணி, அமைப்பாளர்கள் மணிமாறன், பாலு, மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் பழனி, சிவமயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், நிர்வாகிகள் ராஜா, நாகராஜன், சந்திரன், மயிலம் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வக்குமார், நிவேதிதா, ராஜ் பரத் உட்பட பலர் கலந்து கொண்டனர். செந்தில்குமார் நன்றி கூறினார்.