/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் மோதல்: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
/
தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் மோதல்: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் மோதல்: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் மோதல்: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
ADDED : பிப் 17, 2026 05:37 AM

திண்டிவனம்: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால் கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்தது.
திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நேற்று மதியம் 12:00 மணிக்கு, நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் பானுமதி, மேலாளர் நெடுமாறன்உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
நேற்று அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழா நடந்ததால், கவுன்சிலர்கள் பலர் பங்கேற்கவில்லை.
கூட்டம் துவங்கியதும் இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர் சின்னசாமி, ஏன் மயானக்கொள்ளை தினத்தன்று கூட்டம் நடத்துகிறீர்கள். வேறு ஒரு நாள் கூட்டத்தை நடத்தக் கூடாதா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கவுன்சிலர்கள்கள் பேசுகையில், நகராட்சியில் சுற்றித்திரியும் நாய் மற்றும் பன்றிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நகராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடையாமல் நீண்டு கொண்டே போகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தீபா, 'என்னுடைய வார்டில் புதியதாக கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டடம் பணிகள் முடிவடையாமல் நீண்ட நாட்களாக நடக்கிறது' என்றார்.இதற்கு தி.மு.க., கவுன்சிலர் ரம்யா ராஜா, பணிகள் நடைபெற்று வரும் போது எப்படி முடியாமல் உள்ளது என்று கூறலாம் எனக் கேட்டு தீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஒருமையில் பேசிக் கொண்டனர்.
தீபாவிற்கு ஆதரவாக கவுன்சிலர்கள் லதா சாரங்கபாணி, அ.தி.மு.க., கவுன்சிலர் திருமகள் ஆகியோர் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக ஏன் பேசுகிறீர்கள் எனக் கேட்டு மற்ற கவுன்சிலர்களும் கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கவுன்சிலர் தீபா கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார்.கவுன்சிலர் ரம்யா ராஜாவும் வெளியே சென்று, தீபாவுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
அனைத்து கவுன்சிலர்களும் கமிஷனரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நகர மன்ற தலைவரும் கூட்டத்தை விட்டு வெளியே சென்றார். இதனால், 1:00 மணியளவில் நகர்மன்ற கூட்டம் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றாமல் பாதியிலேயே முடிந்தது.

