/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க.,இளைஞரணி பேச்சுப் போட்டி பயிற்சி
/
தி.மு.க.,இளைஞரணி பேச்சுப் போட்டி பயிற்சி
ADDED : செப் 30, 2024 06:19 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பயிற்சி பட்டறை நடந்தது.
விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரி கலை அரங்கில் நடந்த பயிற்சி பட்டறைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்பு, ராஜவேல், பாலாஜி, கலைவாணன், பிரேம், தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் வரவேற்றார். மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.
முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், பாலா, அசோக், சூர்யா கிருஷ்ணமூர்த்தி, சுகுணா திவாகர் வாழ்த்திப் பேசினர்.
எம்.எல்.ஏ.,க்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால் நகர செயலாளர் நைனா முகமது, துணைச் செயலாளர் சுரேஷ்குமார் பங்கேற்றனர்.