/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் செஞ்சியில் ஆலோசனைக் கூட்டம்
/
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் செஞ்சியில் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் செஞ்சியில் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் செஞ்சியில் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூன் 17, 2025 11:48 PM

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.
மாவட்டச் செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் உதயகுமார், பாபு, அண்ணாமலை, விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் வரவேற்றார்.
மாநில துணை செயலாளர் அப்துல் மாலிக் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்செல்வன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், நெடுஞ்செழியன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, வடக்கு மாவட்டத்தில் தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது, அனைத்து கிளைகளிலும் இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமிப்பது, இளைஞரணி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சியளிப்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.