/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தி.மு.க., இளைஞரணி பயிற்சி கூட்டம்
/
விழுப்புரத்தில் தி.மு.க., இளைஞரணி பயிற்சி கூட்டம்
ADDED : ஜன 24, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட பொருப்பாளர் கவுதமசிகாமணி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் வரவேற்றார்.
எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக், தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் லெனின், சொற்பொழிவாளர் இளமாறன் ஆகியோர், இளைஞரணி செயல்பாடு குறித்து பயிற்சியளித்தனர். இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

