/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரணி தொகுதியில் களமிறங்க தி.மு.க., திட்டம் உற்சாகத்தில் உடன் பிறப்புகள்
/
ஆரணி தொகுதியில் களமிறங்க தி.மு.க., திட்டம் உற்சாகத்தில் உடன் பிறப்புகள்
ஆரணி தொகுதியில் களமிறங்க தி.மு.க., திட்டம் உற்சாகத்தில் உடன் பிறப்புகள்
ஆரணி தொகுதியில் களமிறங்க தி.மு.க., திட்டம் உற்சாகத்தில் உடன் பிறப்புகள்
ADDED : ஜன 30, 2024 06:38 AM
ஆரணி லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதியில் போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகிய நான்கு தொகுதிகள் திருவண்ணாமலை மாவட்டத்திலும், செஞ்சி, மயிலம் தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளன.
இந்த தொகுதியில் 84 சதவீதம் பேர் கிராமப் புறங்களிலும், 16 சதவீதம் பேர் நகர்ப் புறத்திலும் வசிக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க., வேட்பாளர் ஏழுமலையை விட் 2 லட்சத்து 30 ஆயிரத்து 806 ஒட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தி.மு.க., கூட்டணி 54.32 சதவீதம் ஓட்டுகளையும், அ.தி.மு.க., 34.03 சதவீதம் ஓட்டுகளையும் பெற்றது. மூன்றாவது இடத்தை சுயேச்சையாக போட்டியிட்ட அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழன் 4.08 சதவீதம் ஓட்டுகளை பெற்றிருந்தார்.
நாம் தமிழர் கட்சி 2.85 சதவீதம் ஓட்டுகளையும், மக்கள் நீதி மய்யம் 1.30 சதவீத ஓட்டுகளையும் பெற்றது. அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த தி.மு.க., கூட்டணி அடுத்து வந்த சட்டசபை தேர்தலின் போது செஞ்சி, செய்யாறு, வந்தவாசியில் மட்டும் வெற்றி பெற்றது. ஆரணி, போளூர் தொகுதியில் அ.தி.மு.க.,வும், மயிலத்தில் பா.ம.க., வும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து இந்த தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்குவது தி.மு.க.,வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த முறை தி.மு.க., இந்த தொகுதியில் களம் இறங்கும் என தெரிகிறது.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் இங்கு போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு பொறுப்பாளர்களாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அமைச்சர் வேலுவும், விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர் மஸ்தானும் இருப்பதால் தேர்தல் களைகட்டும் என உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் எந்த கட்சியுடனும் இன்னும் கூட்டணி முடிவாகாமல் இருப்பதால் அ.தி.மு.க.,வே நேரடியாக களம் இறங்க வாய்ப்பு உள்ளது. பா.ம.க.,வுக்கு இந்த தொகுதியில் செல்வாக்கு அதிகம் உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் தனியாக போட்டியிட்ட பா.ம.க., 2 லட்சத்து 53 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்று தி.மு.க.,வின் தோல்விக்கு வழி செய்தது. இந்த முறை பா.ம.க., - பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றால் இந்த தொகுதியை கேட்டுப் பெற வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் கடந்த முறை வேலுாரில் போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய நீதி கட்சித் தலைவர் சண்முகம் தனது சொந்த தொகுதியான ஆரணியில் போட்டியிட இந்த முறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.