/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்
/
நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்
ADDED : மார் 13, 2026 06:40 AM

விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கோலியனுார் தெற்கு ஒன்றியம், வேலியம்பாக்கத்தில் நடந்த விழாவிற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர் முருகவேல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் புகழ் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அவைத்தலைவர் தேவகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சடகோபன், ஜெகதீசன், சிவகுரு, ராமமூர்த்தி, ஊராட்சி தலைவர் மீனாட்சி, கிளை நிர்வாகிகள் வசந்தராஜா, முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

