UPDATED : ஜூலை 02, 2026 03:39 PM
ADDED : ஜூலை 02, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனத்தில் மணிலா நகர் சாசன தலைவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்க சாசன தலைவர் பாலாஜி வெங்கடேசன், 62; இவர் ஜூலை 1 இரவு 7.30 மணியளவில் நடந்த மணிலாநகர் அரிமா சங்கத்தின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மேடையிலேயே சரிந்து விழுந்து இறந்தார்.
இறந்த பாலாஜி வெங்கடேசனின் கண்களை அவரது மனைவி, மகன் ஒப்புதலுடன் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
சங்கத்தின் முன்னாள் ஆளுநர்கள் சரவணன், ராஜா சுப்ரமணியம், ராம்டெக்ஸ் துணிக்கடை வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் சிவக்குமார், பாபு, மனவளக்கலை பிரபாகரன், விஜயகுமார், தமிழமுதன், முருகன், மூர்த்தி உடனிருந்தனர்.
