UPDATED : ஜூலை 02, 2026 04:15 PM
ADDED : ஜூலை 02, 2026 03:40 PM
செஞ்சி: செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை ஊராட்சியில் மத்திய அரசின் 'விபி ஜி; ராம் ஜி' திட்டம் துவக்க விழா நடந்தது.
மத்திய அரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களுக்கு உயர்த்தி 'விபி ஜி; ராம் ஜி' என மாற்றம் செய்து புதிய விதிமுறைகளுடன் அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டம் துவக்க விழா செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை ஊராட்சியில் நேற்று நடந்தது. ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் பரந்தாமன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் மணிமாறன், உதயகுமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் பிலால் வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் திட்டத்தைத் துவக்கி வைத்து பணிகளை ஆய்வு செய்தார்.
ஒன்றிய பொறியாளர் நாராயணசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் காசி அம்மாள் ஏழுமலை, துணைத் தலைவர் ராமு, ஒன்றிய அவைத் தலைவர்கள் ஆறுமுகம், வாசு பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் குமார் நன்றி கூறினார்.
