/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'எதிர்கட்சியினரை நம்பி ஏமாந்து போயிடாதீங்க...' தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., வீடு வீடாக பிரசாரம்
/
'எதிர்கட்சியினரை நம்பி ஏமாந்து போயிடாதீங்க...' தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., வீடு வீடாக பிரசாரம்
'எதிர்கட்சியினரை நம்பி ஏமாந்து போயிடாதீங்க...' தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., வீடு வீடாக பிரசாரம்
'எதிர்கட்சியினரை நம்பி ஏமாந்து போயிடாதீங்க...' தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., வீடு வீடாக பிரசாரம்
ADDED : நவ 22, 2025 04:50 AM

மயிலம்: 'தேர்தலில் எதிர் கட்சியினர் பிரசாரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாந்துவிடக் கூடாது என தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி தெரிவித்தார்.
மயிலம் சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளை, தி.மு.க., நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர். மயிலம் தொகுதி தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் கடலுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி மேற்பார்வையில், பெரியதச்சூர், பாஞ்சாலம், வி.நல்லாளம், கொத்தமங்கலம், பாலாப்பட்டு, செண்டூர் ஊராட்சிகளில் தி.மு.க., தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா தலைமையில், வீடு, வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்தது.
கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வீடுகளின் திண்ணையில் அமர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மூதாட்டிகள் மற்றும் பெண்களிடம் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பிற்கு மாதம் தோறும் உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
வரும் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரசாரம் செய்வதை நம்பி ஆதரவு அளித்தால், ஏமாற்றம்தான் கிடைக்கும். தற்போது தி.மு.க., அரசு வழங்குகின்ற நலத் திட்ட உதவிகளை நிறுத்தி விடுவார்கள். அவர்களை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க., கூட்டணியை ஆதரிக்க வேண்டும்' என்றார்.
தலைமை தீர்மானக்குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், மத்திய ஒன்றிய செயலாளர் செழியன், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம், சுப்ரமணி, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிளைச் செயலாளர்கள் உடனிருந்தனர்.

