/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே கேட் 'ஹைட் கேஜில்' டபுள் டக்டர் கன்டெய்னர் லாரி சிக்கியது; கண்டமங்கலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ADDED : பிப் 13, 2024 11:44 PM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே அமைக்கப்பட்டிருந்த 'ஹைட் கேஜை' தாண்டி செல்ல முடியாமல் நின்ற கன்டெய்னர் லாரியால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு கார்களை ஏற்றி வந்த இரண்டு அடுக்கு கன்டெய்னர் லாரி நேற்று காலை 8:30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சென்றது.
அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் ரயில்வே கேட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கேட் திறக்கப்பட்ட நிலையில் கன்டெய்னர் லாரி அதிக உயரம் இருந்ததால், ரயில் பாதை அருகே அமைத்துள்ள இரும்பிலான 'ஹைட் கேஜை' கடந்து செல்ல முடியால் கண்டெய்னர் லாரி நின்றது.
குறுகிய சர்வீஸ் சாலையில் கன்டெய்னர் லாரியின் முன்னாலும், பின்னாலும் வாகனங்கள் நின்றதால் முன்நோக்கியும் செல்ல முடியாமல், பின்நோக்கியும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ரயில்வே கேட்டின் இருபுறமும் 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் ரயில்வே கேட்டில் 'ஹைட் கேஜ்' அருகே நின்றிருந்த கன்டெய்னர் லாரியை மீட்டு நான்கு வழிச்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி போலீஸ் ஸ்டேஷன் எதிரே நிறுத்தி, போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.
அதன்பிறகு கன்டெய்னர் லாரியை சின்னபாபுசமுத்திரம், செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு வழியாக புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குரவரத்து கடுமையாக பாதித்தது.