sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சமூக வலைதள பதிவில் கவனம் தேவை  டாக்டர் வித்யா ராம்குமார் பேச்சு

/

 சமூக வலைதள பதிவில் கவனம் தேவை  டாக்டர் வித்யா ராம்குமார் பேச்சு

 சமூக வலைதள பதிவில் கவனம் தேவை  டாக்டர் வித்யா ராம்குமார் பேச்சு

 சமூக வலைதள பதிவில் கவனம் தேவை  டாக்டர் வித்யா ராம்குமார் பேச்சு


ADDED : பிப் 20, 2026 04:55 AM

Google News

ADDED : பிப் 20, 2026 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட கருந்தரங்கு நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, புதுச்சேரி மாநில வரதட்சணை தடுப்பு ஆலோசணை வாரிய தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார் பேசியதாவது:

பெண்களுக்கு பணியிட கண்ணியம் என்பது ஒவ்வொரு பணியாளரும் மரியாதை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பான சூழலில் வேலை செய்வதை சட்டம் உறுதி செய்கிறது. பெண்களை துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றைத் தடுத்து, நிறுத்திட போஸ் (POSH) சட்டம் (2013) உள்ளிட்டவற்றின் மூலம் பணியிட அமைதியைப் பேணுவது அவசியம்.

இந்த சட்டம் பாலியல் ரீதியான தொல்லைகள், அநாகரீகமான சைகைகள் அல்லது பேச்சு ஆகியவற்றிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. இச்சட்டம் சுப்ரீம் கோர்ட்டின் விசாகா வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. பெண்கள் பாலியல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகும் போது, மூன்று மாத காலத்தில் புகார் செய்யலாம்.

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்' கீழ் உள் புகார் குழுக்களை அமைத்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் அல்லது பாகுபாடு ஏற்பட்டால், நேரடியாக இக் குழுவிடம் புகார் அளிக்கலாம்.

கல்லுாரியில் பயிலும் மாணவிகள், தங்களது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி ஆன்ராய்டு போன் மூலம் பேஸ்புக், இன்ஸ்டா கிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களில் தேவையற்ற பதிவுகளையும், புகைப்படங்களை பதிவிடுவது, ஆபத்தை விளைவிக்கும். சமூக வலைதளத்தின் மூலம் தவறான நண்பர்களுடன் பழகுவதால், பல்வேறு இன்னல்களில் சிக்கும் நிலை உருவாகலாம்.

மேலும், பெண்கள் சமுதாயத்தில் தங்கள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட அழுத்தங்களை எதிர்த்து போராட முன் வர வேண்டும். தங்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டு அஞ்சாமல், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது பெண்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் காவல்துறையிடம் புகார் கொடுக்க வேண்டும்.

இதன் மூலம் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவதுடன், சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்வதை முற்றிலுமாக தடுக்க முடியும்.

அவசர கால உதவி எண்கள்

பெண்கள் பாதுகாப்பு எண் 1091 மூலம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம். தேசிய மகளிர் ஆணையத்தின் 14490 என்ற ஹெல்ப்லைன் மூலம் பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை புகார்களைப் பதிவு செய்யலாம். அவசர உதவிக்கு 112 மற்றும் 181 ஆகிய எண்களில் அனைத்து அவசர கால உதவிகளுக்கும் (காவல்துறை, ஆம்புலன்ஸ்) தொடர்பு கொள்ளலாம். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புகாரை 1098, சைபர் கிரைம் குறித்த புகாரை 1930 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மத்திய அரசு அமைத்துள்ள SHe-Box (Sexual Harassment electronic Box) ஆன்லைன் தளம் மூலம், தனியார் அல்லது அரசுத் துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் புகார் அளிக்கலாம்.








      Dinamalar
      Follow us