/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதியம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா
/
திரவுபதியம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா
ADDED : மார் 16, 2025 11:23 PM

வானூர்; தைலாபுரம் திரவுபதியம்மன், கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.
வானூர் அடுத்த தைலாபுரம் கிராமத்தில், சித்தி விநாயகர், திரவுபதியம்மன், கூத்தாண்டவர் கோவில்களும், பொறையாத்தம்மன், அய்யனாரப்பன் ஆகிய கோவில்களும் அமைந்துள்ளது. இந்த கோவில்களின் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிேஷகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி, கடந்த 14ம் தேதி காலை 9;00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 10;30 மணிக்கு, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜையும், நடந்தது. தொடச்சியாக நேற்று காலை 5;30 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், கோ பூஜைகளும் நடந்தது.
காலை 7;30 மணிக்கு, சித்தி விநாயகர், பொறையாத்தம்மன், அய்யனாரப்பன் கோவில்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, கூத்தாண்டவர், திரவுபதியம்மன் கோவில்களின் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.