/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துார்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு
/
துார்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 28, 2024 04:39 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில், கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகரில் மழைநீர் வடிகால் பாதையாக இருந்த கோலியனுாரான் வாய்க்கால் காலப்போக்கில் கழிவுநீர் வாய்க்காலாக மாறியது. மேலும், இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால், அடைப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கோலியனுாரான் வாய்க்கால் துார் வாரும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் ரங்கநாதன் ரோடு பகுதியில் நடந்த பணியை, கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்து, முழுமையாக சீரமைக்க நகராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர் நல அலுவலர் ஸ்ரீபிரியா, பணி மேற்பார்வையாளர் ஹரிபிரசாத், கவுன்சிலர் மணி உடனிருந்தனர்.