/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் குடிநீர் மையம் திறப்பு
/
அரசு கல்லுாரியில் குடிநீர் மையம் திறப்பு
ADDED : அக் 13, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு விழா நடந்தது.
கல்லுாரியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை கலெக்டர் பிரசாந்த் திறந்து வைத்தார். மணிகண்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் கலெக்டர் பிரசாந்த் 4.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் மையத்தினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.