/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் மாணவியர் விடுதி திறப்பு விழா
/
செஞ்சியில் மாணவியர் விடுதி திறப்பு விழா
ADDED : அக் 13, 2025 12:26 AM
செஞ்சி; செஞ்சியில் 5.59 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாணவியர் விடுதி திறப்பு விழா நடந்தது.
விடுதியை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து விடுதி கட்டடத்தில் மஸ்தான் எம்.எல்.ஏ., கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் வளர்மதி, தாட்கோ செயற் பொறியாளர் அன்புசாந்தி, ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி செயல்மணி மற்றும் கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விடுதி காப்பாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.