/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சுக்காக காத்திருந்தவரை தாக்கிய போதை நபர் கைது
/
பஸ்சுக்காக காத்திருந்தவரை தாக்கிய போதை நபர் கைது
ADDED : ஜன 08, 2024 05:27 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் சாலையோரம் நின்றிருந்தவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த குத்தாம்பூண்டியைச் சேர்ந்தவர் ஹரிசெல்வம், 48: இவர் நேற்று முன்தினம் மாலை சாலையோரம் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக குடிபோதை யில் சென்ற விக்கிரவாண்டி கக்கன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 40; என்பவர் திடீரென அங்கிருந்த கடையின் எதிரே போடப்பட்டிருந்த சேரை துாக்கி ஹரிசெல்வத்தை தாக்கினார்.
பலத்த காயமடைந்த ஹரிசெல்வம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.